"நட்பு நாடுகளின் சட்டரீதியான செயல்களை சீனா மதிக்க வேண்டும்" மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா-சீனா இடையிலான இணையவழி மாநாட்டில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நட்பு நாடுகளின் சட்டரீதியான செயல்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்-யீயும் பங்கேற்ற இணைய வழி உரையாடலில் தெரிவித்தார்.
சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் சர்வதேச அளவிலான நல்லுறவு என்று வழக்கமாக சொல்லப்படுவதை விட அதனை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இணைவழி சந்திப்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஆகியோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து பேசிய வாங்யீ, மிகவும் நுட்பமான பிரச்சினைகளை இருதரப்பு உறவுகளை சேதப்படுத்தாமல் கவனமாக கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.
Comments